செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு


செப் 29-ம் தேதியை  ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்”  தினமாக கொண்டாட  பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:28 AM GMT (Updated: 21 Sep 2018 11:28 AM GMT)

செப் 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

செப்டம்பர் 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாக்கிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் ஊடுருவி துல்லியமாக தாக்குதல் நடத்தியதை நினைவுக்கூறும் வகையில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் தொடர்பாக பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்ய யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு உத்தரவின்படி செப்.29 சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட வேண்டும்.  இதனை முன்னிட்டு கருத்தரங்குகள், சிறப்பு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கண்காட்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.  ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி, அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லையில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்கு சுமார் 3 கி.மீ. வரை உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களின் மீது இந்திய ராணுவம் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துள்ளிய தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Next Story