இந்திய அரசுதான் ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்தது - ஹாலாண்டே பரபரப்பு பேட்டி


இந்திய அரசுதான் ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்தது - ஹாலாண்டே பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2018 3:49 PM GMT (Updated: 21 Sep 2018 3:49 PM GMT)

இந்திய அரசுதான் ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹலாண்டே பேட்டியளித்துள்ளார்.


புதுடெல்லி,

பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நேரிட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கூட்டாக விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் விவகாரத்தில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) ஒப்பந்தத்தில் இருந்து கழற்றிவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது எனவும் குற்றம் சாட்டியது. 

ஆனால் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டிடம் திறன் கிடையாது, காங்கிரஸ்தான் காரணம் என மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. “ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்தான் தேர்வு செய்தது, இதில் அரசின் பங்கு எதுவும் கிடையாது,” என மத்திய அரசு கூறிவருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹலாண்டே, ரிலையன்ஸ் விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான், அம்பானி குரூப்புடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டோம் என கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டியை அடுத்து காங்கிரஸ் கடுமையான தாக்குதலை மத்திய அரசுக்கு எதிராக தொடுக்க தொடங்கியுள்ளது.


Next Story