காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: 370-வது சட்டப்பிரிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு, அடுத்த வாரம் விசாரணை


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: 370-வது சட்டப்பிரிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு, அடுத்த வாரம் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2018 5:04 PM GMT (Updated: 21 Sep 2018 5:04 PM GMT)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370–வது சட்டப்பிரிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

பா.ஜனதாவைச் சேர்ந்தவரும், வக்கீலுமான அஸ்வினி குமார் உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘அரசியல் சட்டம் வகுக்கப்பட்டபோது, தற்காலிக ஏற்பாடாகவே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவு சேர்க்கப்பட்டது. 1957–ம் ஆண்டு, காஷ்மீர் அரசியல் நிர்ணயசபை கலைக்கப்பட்டவுடன், அப்பிரிவு காலாவதி ஆகிவிட்டது. மேலும், சிறப்பு அந்தஸ்து காரணமாக, நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், காஷ்மீருக்கு பொருந்தாதநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, 370–வது பிரிவு, அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Next Story