தேசிய செய்திகள்

நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து + "||" + We kill people Not Tigers: Supreme Court opinion

நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து

நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து
எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்தில் டிரைமெக்ஸ் குரூப் என்ற தனியார் நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதையடுத்து, அந்நிறுவனம் சுரங்கத் தொழிலை நிறுத்தி வைக்க ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் பயந்து போய், தங்களது நிறுவனத்துக்கு எதிராக ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல. எங்களைப் பார்த்து மாநிலங்கள் பயப்பட வேண்டாம்’’ என்று கூறினர்.தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 37 பேர் கைது
சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கும்பகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல்காந்தி கேள்வி
சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில், ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றார்
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்று கொண்டார்.
4. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் ஓட்டெடுப்பில் வெற்றி
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு செனட் ஓட்டெடுப்பில் பிரெட் கவனாக் வெற்றி பெற்று மயிரிழையில் தப்பினார்.
5. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயன்றார். அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.