ஒடிசாவில் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி


ஒடிசாவில் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Sep 2018 6:35 AM GMT (Updated: 22 Sep 2018 6:35 AM GMT)

பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைக்க ஒடிசா சென்ற பிரதமர் மோடி, தால்சீர் பகுதியில் இயங்கிவரும் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்து பேசினார். #PMModi

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று புவனேஷ்வர் வந்தார். பிரதமரை மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் வரவேற்றார். மாநிலத்தின் தால்சீர் உர ஆலைக்கு அடிக்கல் நாட்டிய மோடி, பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்கிறார். இதனிடையே தால்சீர் பகுதியில் இயங்கிவரும் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். 

இதன் பின்னர் மாநிலத்தின் மேற்கு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஜார்சுகுடா விமான நிலையத்தையும் மோடி திறந்து வைக்கிறார். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திலிருந்து உள்ளூர் விமானங்கள் இயக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

பின்னர் கர்ஜன்பஹால் நிலக்கரி சுரங்கத்தை நாட்டுக்கு அர்பணிக்கும் பிரதமர் மோடி, ஜார்சுகுடா-பாராபளி-சர்தேகா பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதையை தொடங்கி வைக்கிறார். அதே போல் துலங்கா நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியையும், அதை ஏற்றி செல்லும் நடவடிக்கையும் மோடி தொடங்கி வைக்கிறார். இதனிடையே அடுத்த வருடம் ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் ஒடிசா பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story