மோடியும் அம்பானியும் இணைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு


மோடியும் அம்பானியும் இணைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 22 Sep 2018 7:33 AM GMT (Updated: 2018-09-22T13:03:32+05:30)

மோடியும் அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில் மோடியை விமர்சித்து மேலும் ஒரு பதிவை இன்று பதிவிட்டுள்ளார். 

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “பிரதமர் மோடியும், அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   நமது வீரர்களின் தியாகத்தை அவமதித்து விட்டீர்கள் மோடி. உங்களை நினைத்து வெட்கப்படுகிறோம். இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story