பிரதமர் மோடியை பெருமை படுத்துவதற்காகவே "சர்ஜிக்கல் தினம் " கபில் சிபில் குற்றச்சாட்டு


பிரதமர் மோடியை பெருமை படுத்துவதற்காகவே சர்ஜிக்கல் தினம்  கபில் சிபில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Sep 2018 8:58 AM GMT (Updated: 22 Sep 2018 8:58 AM GMT)

பிரதமர் மோடியை பெருமை படுத்துவதற்காகவே "சர்ஜிக்கல் தினம் " கபில் சிபில் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலை தொடுத்த‌து. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தினர், பல பயங்கரவாதிகளையும் கொன்று குவித்து வெற்றியுடன் நாடு திரும்பினர். 

இந்த தினத்தை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த பல்கலைகழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு தினத்தை கொண்டாட உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், பிரதமர் மோடியை பெருமை படுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக விமர்சித்துள்ளார். 

இதே போல, மேற்கு வங்க கல்வி துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் லாபத்திற்காக யூஜிசியை, பா.ஜ.க பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், எதிர்கட்சிகளின் குற்றாச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிந்துரைபடியே சர்ஜிக்கல் தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். 

Next Story