செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது மங்கள்யான் விண்கலம்


செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது மங்கள்யான் விண்கலம்
x
தினத்தந்தி 24 Sep 2018 5:48 AM GMT (Updated: 24 Sep 2018 5:48 AM GMT)

செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. #Mangalyaan

பெங்களூரு,

இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி புவி ஈர்ப்பு பரப்பை மங்கள்யான் விண்கலம் கடந்து சென்றது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் அது நிலை நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இதுவரை 715-க்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. அதோடு செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. உபரி எரிபொருளால் மங்கள்யான் விண்கலம் கூடுதலாக 6 மாதங்கள் செயல்படும் என இஸ்ரோ முதலில் தெரிவித்தது. பின்னர் மங்கள்யான் மேலும் பல ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்று 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மங்கள்யான் விண்கலம் கடந்த 2017 ஜூன் மாதம் 19 ந்தேதியுடன் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் 1,000 நாட்களை நிறைவு செய்தது. 

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமையுடன்  செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் தனது  நான்கு ஆண்டுகளை  மங்கள்யான் நிறைவு செய்து உள்ளது.

இது குறித்து இஸ்ரோ சேட்டிலைட் சென்டரின் முன்னாள் இயக்குநர் மற்றும் மங்கள்யான் திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-

மங்கள்யான்  செவ்வாயில் அதிக  உயரத்திலிருந்து மார்ஸ் கலர் கேமராவுடன், படங்களை எடுத்து வருகிறது.  நாம் செவ்வாயின் பருவகால மாறுபாடுகளை இரண்டு மார்ஷிய ஆண்டுகளாக  பார்க்க முடிகிறது, மங்கள்யான்  வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் மீதான பார்வை மாறி உள்ளது  என்பதை நான் தனிப்பட்ட அனுபவத்தில் அறிந்து கொண்டேன் . சந்திரயான் -1, மங்கள்யான் இந்த  இரு பயணங்கள் ஆகியவற்றிற்கு முன்பாக மற்றவர்கள் நம்மை  பார்ப்பதில் வித்தியாசம் உள்ளது. சர்வதேச சமூகம் இப்போது நம்மை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தற்போது, இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் மீத்தேன் தடயங்களை  பகுப்பாய்வு செய்கின்றனர், இது வாழ்க்கை சாத்தியமான ஆய்வாகும்.   "செவ்வாய் கிரகத்தின் மீத்தேன் சென்சார் தரவுகளை அனுப்பியுள்ளதுடன், விஞ்ஞானிகள் தற்போது மீத்தேன் தடயங்களைக் கண்டுபிடிப்பதை இணைத்துள்ளனர். அது நேரம் எடுக்கும் என  கூறினார்.

தற்போது, இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் மீத்தேன் தடயங்களை  பகுப்பாய்வு செய்கின்றனர், இது வாழ்க்கை சாத்தியமான ஆய்வாகும்.   "செவ்வாய் கிரகத்தின் மீத்தேன் சென்சார் தரவுகளை அனுப்பியுள்ளதுடன், விஞ்ஞானிகள் தற்போது மீத்தேன் தடயங்களைக் கண்டுபிடிப்பதை இணைத்துள்ளனர். அது நேரம் எடுக்கும், " என கூறினார்.

Next Story