ஒடிசாவில் நக்சலைட்டுகளை நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் டிஜிபி தகவல்


ஒடிசாவில் நக்சலைட்டுகளை நடமாட்டத்தை  கண்காணிக்க டிரோன் கேமராக்கள் டிஜிபி தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2018 6:30 AM GMT (Updated: 24 Sep 2018 6:30 AM GMT)

ஒடிசாவில் நக்சலைட்டுகள் நடமாட்ட உள்ள பகுதிகளை கண்காணிக்க டிரோன் கேரமாரக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிஜிபி ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

ஒடிசாவில் நக்சலைட்ஆதிக்கத்தை ஒடுக்க, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நக்சலைட்டுகள் நடமாட்ட உள்ள பகுதிகளை கண்கானிக்க டிரோன் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில டிஜிபி ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது;

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பதற்காக டிரோன் காமிராக்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.  மால்காங்கிரி மற்றும் கோராபுட் மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் இயக்கத்தை கண்டுபிடிக்க டிரோனை போலீசார் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிதியாண்டில் சில   டிரோன் கேமராக்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். வாங்கப்படும் டிரோன் கேமராக்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வைத்து கண்காணிக்கப்படும். 

புவனேஷ்வரில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை  உலக ஆண்கள் போட்டி நடைபெற உள்ளது.  இதனையொட்டி ஆண்கள் ஹாக்கி போட்டியில் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க  கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காக  டிரோன் காமிராக்களை பயன்படுத்த போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிரோன் கேமராக்கள்  உளவு பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நவீன கேமராக்கள் ஆகும். இந்தியா உள்பட  வளரும் நாடுகளின், விண்வெளி ஆராய்ச்சி, அணுகுண்டு சோதனை மற்றும் சேமிப்பு போன்ற விவரங்கள் மனித சக்தியில்லாமல், உளவு டிரோன் கேமரா மூலம் கண்டுபிடிக்கும் வசதியும் இந்த கேமராவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story