கொல்கத்தா அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து


கொல்கத்தா அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து
x
தினத்தந்தி 24 Sep 2018 6:58 AM GMT (Updated: 24 Sep 2018 6:58 AM GMT)

கொல்கத்தா அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கொல்கத்தா, 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கக்ட்விப் என்ற இடம் உள்ளது. கக்ட்விப்  பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. 

விபத்து நடைபெற்ற இடத்திற்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மேற்கு வங்காளத்தில் ஏற்படும் 3-வது மேம்பால விபத்து இதுவாகும். கடந்த 4 ஆம் தேதி கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 3 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயம் அடைந்தனர். அதேபோல் வடக்கு பெங்காலில் உள்ள சில்குரி பகுதியில் பழமை வாய்ந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரக் ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தார். 


Next Story