தேசிய செய்திகள்

பள்ளிக்கூட மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை ; வாலிபர் கைது + "||" + Kerala man lives a double life as DJ on social media, arrested for duping minors

பள்ளிக்கூட மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை ; வாலிபர் கைது

பள்ளிக்கூட மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை ; வாலிபர் கைது
கேரள மாநிலத்தில் பள்ளிக்கூட மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஏமாற்றி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொச்சி

கேரளா மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன் (19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி தான் மாடலாக பணிபுரிந்து வருவதாகவும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் ‘டிஜே’ வாக பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவரது மார்பிங் புகைப்படங்களை பார்த்து மயங்கிய பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் நண்பர்களாயினர்.

பேஸ்புக்கில் இவருக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் உள்ளனர். இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை பயாஸ் முபீன் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கோழிக்கோடு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்முபீனை கைது செய்தனர். விசாரணையில், இவர் பல பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மட்டுமின்றி தாம் பெற்றோர்களை  இழந்தவன் எனக் கூறி வசதி படைத்த பெண்களிடம் இருந்து பண மோசடியும் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்,” குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. இந்தியாவில் பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆபத்து? பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் கும்பல்
பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் அந்தரங்க தகவல்களை திருடி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.
3. கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்.
4. மீடூ விவகாரத்தில் நீண்டு கொண்டே போகும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல்
மீடூ விவகாரத்தில் நீண்டு கொண்டே போகும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் பாதிப்படைந்த பெண்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
5. குஜராத்தில் வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல் 342 பேர் கைது
குஜராத்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக, வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 342 பேர் கைது செய்யப்பட்டனர்.