டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி


டெல்லியில் 3 மாடி  கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 26 Sep 2018 5:58 AM GMT (Updated: 2018-09-26T11:40:10+05:30)

டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் 3 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள  சவான் பார்கில் 3 மாடி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அடைந்த அக்கம்பக்கத்தில் வசித்து வந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

Next Story