செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற விமானி அறைக்குள் அத்துமீறி நுழைந்த பயணி, விமானத்திலிருந்து வெளியேற்றம்


செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற விமானி அறைக்குள் அத்துமீறி நுழைந்த பயணி, விமானத்திலிருந்து வெளியேற்றம்
x
தினத்தந்தி 26 Sep 2018 6:47 AM GMT (Updated: 26 Sep 2018 6:47 AM GMT)

செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற விமானி அறைக்குள் அத்துமீறி நுழைந்த பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம்  ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான பயணி ஒருவர், விமானி அறைக்குள் செல்ல முற்பட்டார். விமான சிப்பந்திகள் தடுத்து நிறுத்த முயற்சித்தும், தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற வேண்டும் என கூறி அடாவடியாக விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தார். 

இதையடுத்து, விமானத்தில் அடாவடியாக நடந்து கொண்ட, விமானப்பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். விமானத்தில் இருந்து வெளியேறியதும், உடனடியாக அந்தப்பயணியை, விமான நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். விமானத்தில், விதியை மீறி நடந்துகொண்ட பயணி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமான விதிகளின் படி, விமானியின் (காக்பிட்) அறைக்குள் பயணிகள் செல்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். முன்னதாக, கடந்த திங்கள் கிழமை, டெல்லியில் இருந்து  பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்த கோ ஏர் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தின் பின்கதவை திறக்க முயற்சித்தார். இதை கவனித்த சக பயணிகள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து விமான சிப்பந்திகள் அந்த நபரை பிடித்துச் சென்றனர். விமானம் இறங்கியதும் மத்திய தொழிற்படை பாதுகாப்பு படையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

Next Story