தேசிய செய்திகள்

ரபேல் விவகாரம்; ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார்: ராஜ்நாத் சிங் + "||" + Ra Ga will end up being "Ra-fail" in "misleading" people over Rafale: Rajnath

ரபேல் விவகாரம்; ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார்: ராஜ்நாத் சிங்

ரபேல் விவகாரம்; ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார்:  ராஜ்நாத் சிங்
ரபேல் விவகாரத்தில் மக்களை தவறாக வழி நடத்தும் ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கொச்சி,

கேரளாவில் பாரதீய ஜனதாவின் புதிய மாநில தலைவராக பி.எஸ். ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டது பற்றிய கட்சி கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, நீங்கள் ஒரு பொய்யை பல முறை கூறினால் மக்கள் அதனை நம்பும்படி தள்ளப்பட்டு விடுவார்கள்.  ரபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அதனை செய்து வருகின்றனர் என கூறினார்.

அது ரபேல் இல்லை.  ரா-பெயில் (ராகுலின் தோல்வி).  அவர் முடிவில் தோல்வி அடைவார்.  ரபேல் விவகாரம் பற்றிய உண்மை ராகுல் காந்திக்கு தெரியும்.  ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மக்களை தவறாக வழி நடத்தி வருகிறார் என சிங் கூறினார்.

ராகுல் காந்தியை நேரிடையாக குறிப்பிடாமல், காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு எதிராக அவதூறு பேச்சுகளை பேசி வருகிறார்.  அவரது பதவியின் கண்ணியத்திற்கு கீழ் செல்லாமல் இருக்கும்படி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்
ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
2. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா? பிரகாஷ் ராஜ் பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
3. விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி
விவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.
5. காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.