தென்மேற்கு பருவமழை முடிந்தது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தென்மேற்கு பருவமழை முடிந்தது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2018 2:45 AM IST (Updated: 1 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே (91 சதவீதம்) மழை பெய்து இருப்பதாகவும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
1 More update

Next Story