ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தீ வைப்பு

ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் போதையில் ஒருவர் மேல் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் நகரில் உள்ள தனியார் பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி என்ற மாணவர்கள் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ள பெயர் வெளியிடப்படாத அந்த மாணவியும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளார். மகேந்தர் மற்றும் ரவியும் மாணவியை தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
நேற்று 7.30 மணி அளவில் மிஷன் காம்பவுண்ட் பகுதிக்கு 2 பீர் பாட்டில்களுடன் மது அருந்தி உள்ளனர். அந்த பெண்ணிற்காக தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டுள்ளனர்.
இதில் மகேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் உள்ள போலீஸார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்த மாணவர்கள் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களென்று உணர்ந்தபோது, அவர்கள் சோகமாகி, தாங்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள் என்று உள்ளூர் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






