பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்


பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்
x
தினத்தந்தி 2 Oct 2018 12:00 AM IST (Updated: 1 Oct 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக, இந்திய பெண் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார். கீதா கோபிநாத், இந்தியாவில் பிறந்த பெண் ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்தவர். இவர் ரகுராம் ராஜனுக்கு பிறகு, இந்த பதவியில் நியமிக்கப்படும் 2–வது இந்தியர் ஆவார்.

கீதா கோபிநாத், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ஒரு பொருளாதார பத்திரிகையின் இணை ஆசிரியராக உள்ளார். 40 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்.

1 More update

Next Story