ஏ.டி.எம்.மில் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் - பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

ஏ.டி.எம்.மில் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
பாரத ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மூலம் அந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் எடுக்க முடியும் என்ற நிலை தற்போது இருந்து வருகிறது.
இந்த நிலையில், கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுப்பதற்கான இந்த வரம்பை அந்த வங்கி ரூ.20 ஆயிரமாக குறைக்க முடிவு செய்து இருக்கிறது. ஏ.டி.எம்.கள் மூலம் பணம் எடுப்பதில் மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார்கள் வந்ததாலும், டிஜிட்டல் பண பரிமாற்ற நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இந்த மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்குமாறு தனது கிளைகள் அனைத்தையும் பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

Related Tags :
Next Story