புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்கிறார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதியில் இருந்து அப்பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த 10 நாட்களில், அவர் தலைமையிலான அமர்வு முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு அளித்தது. அவர் இன்று ஓய்வு பெறுகிறார்.
புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள ரஞ்சன் கோகாய், அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, குறிப்பிடத்தக்க நீதிபதி. அவர் சிவில் உரிமைகளுக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். அதற்கு சமீபத்திய தீர்ப்புகளே உதாரணம். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்களாகவே தொடர்ந்து இருப்போம் என்று அவர் பேசினார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது:-
இந்திய நீதித்துறை, உலகிலேயே மிகவும் வலிமையான நீதித்துறை. எண்ணற்ற முக்கியமான வழக்குகளை கையாளும் திறன் பெற்றது. நீதிபதிகளுக்கு மனிதநேய முகம் வேண்டும்.
சரித்திரம் சில நேரங்களில் கனிவாகவும், சில நேரங்களில் கனிவின்றியும் இருக்கும். நான் சரித்திரத்தை வைத்து மனிதர்களை எடை போடுவது இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் பார்வையை வைத்தே மதிப்பிடுகிறேன். நான் பார் கவுன்சிலுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இங்கிருந்து திருப்தியுடன் செல்கிறேன் என்று தலைமை நீதிபதி பேசினார்.

Related Tags :
Next Story