மத்திய மந்திரி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தற்கொலை
மத்திய மந்திரி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பரூக்காபாத்,
உத்தரபிரதேச மாநிலம் ஷகானாபூர் பகுதியில் ஒரு வங்கி கிளை திறப்பு விழாவில் மத்திய ராஜாங்க நிதி மந்திரி சிவபிரதாப் சுக்லா கலந்து கொண்டார். அவரது பாதுகாப்பு பணியில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாரா பாபு (வயது50) நியமிக்கப்பட்டு பணியில் இருந்தார்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அவருக்கு மொபைல் போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாரா பாபு பின்னர் அருகில் இருந்த ஒரு கடைக்குள் சென்று பாதுகாப்பு பணிக்காக தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story