அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது - நிதின் கட்காரி


அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 4 Oct 2018 9:39 AM GMT (Updated: 4 Oct 2018 9:39 AM GMT)

அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது என நிதின் கட்காரி கூறியுள்ளார்.

ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு; தேசம் முழுவதுமான வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக மூத்த அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது என்று கூறியுள்ளார் என மீடியா தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது, இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிதம் சர்வதேச மார்க்கெட்டை நம்பியே உள்ளது. 

இந்த வருட தொடக்கத்தில் இருந்து ரூபாயின் மதிப்பு தலைகீழாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியாவின் அன்னிய செலவானி அதிகரித்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போக்கு நிலவி வருகிறது.

டாலருக்கு நிகராக 13 சதவித சரிவை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையின் உயர்வு செங்குத்தாக உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இவ்விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரிக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கம் உட்செல்கிறது. ஏற்கனவே நிதின் கட்காரி பேசுகையில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள் பயன்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார். 

கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்க பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.


Next Story