தேசிய செய்திகள்

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது + "||" + #AstroSat completes 3 years since its launch and has observed over 750 sources so far.

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
ஆஸ்ட்ரோசாட் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஆஸ்ட்ரோசாட் இன்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 4 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்நிலையில் மற்றொரு செயற்கைக்கோள் விண்வெளியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அஸ்ட்ரோசாட், இந்தியாவின் முதல் மல்டி-வேவ்லென்த் விண்வெளி செயற்கைக்கோள் ஆகும். 

இது கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உடன், விண்வெளியில் 3 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதனை ’இம்மாதத்தின் சிறப்பு படம்’ என்ற பெயரில் இஸ்ரோ தனது இணையதளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறது. 

 ஆஸ்ட்ரோசாட் இன்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மற்றும் இதுவரை 750 ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. ஆஸ்ட்ரோசாட் தரவு 100 க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தரவை அணுகலாம் என குறிப்பிட்டு உள்ளது.

இந்த செயற்கைக்கோள் படம் பிடிக்கப்படும் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும், மாதந்தோறும் இஸ்ரோ தனது இணையதளத்தில் சிறப்பு பதிவாக வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் அஸ்ட்ரோசாட்டின் 3ஆம் ஆண்டு பயணத்தைக் குறிக்கும் வகையில், சில புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளது. 

அதில் முழுவதுமாக தயாரான அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள், சென்சார்களுடனான மாதிரி உள்ளிட்டவை அடங்கும். இந்த செயற்கைக்கோளில்  5 உபகரணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் விண்வெளியில் இருக்கும் ஒரே பொருளைக் கவனிக்க வல்லவை.

இந்த 5 தொலைநோக்கிகளும் அல்ட்ரா வயலெட், எக்ஸ்-ரே, காமா கதிர்கள் ஆகியவற்றை உள்வாங்கும் திறனை அஸ்ட்ரோசாட்டிற்கு அளிக்கிறது. 

அவை அல்ட்ரா வயலெட் இமேஜிங் டெலஸ்கோப்(UVIT), சாப்ட் எக்ஸ்-ரே டெலஸ்கோப்(SXT), மிகப்பெரிய பரப்பு எக்ஸ்-ரே கவுண்டர்(LAXPC), காட்மியம் ஜிங்க் டெல்லுரைடு இமேஜர்(CZTI), ஸ்கேனிங் ஸ்கை மானிட்டர்(SSM) ஆகியவை ஆகும். 

ஆசிரியரின் தேர்வுகள்...