பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2018 12:15 PM GMT (Updated: 5 Oct 2018 12:15 PM GMT)

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


புதுடெல்லி,


வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் செங்குத்தாக உயர்ந்து சென்ற நிலையில் மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், கலால் வரி குறைப்பு என்பதே கிடையாது என்ற ஸ்திரமான நிலையே மத்திய அரசு பின்பற்றியது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து 11 மாநிலங்களும் ரூ. 2.50 குறைப்பை அறிவித்தது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் அதில் இணைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக நிதியமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதில்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மீண்டும் வலுயுறுத்தலை முன்வைத்துள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், “மதிப்பிற்குரிய மோடிஜி, விண்ணை எட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார். 


Next Story