இந்தியாவில் சிறுவர்களிடையே மன அழுத்தம் அதிகரிப்பு ‘எய்ம்ஸ்’ பேராசிரியர் தகவல்


இந்தியாவில் சிறுவர்களிடையே மன அழுத்தம் அதிகரிப்பு ‘எய்ம்ஸ்’ பேராசிரியர் தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:15 PM GMT (Updated: 7 Oct 2018 9:58 PM GMT)

உலக மனநல தினம், அக்டோபர் 10–ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியின் மனோதத்துவ துறை பேராசிரியர் ராஜேஷ் சாகர் கூறியதாவது:–

புதுடெல்லி,

மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம்பேர், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். 75 சதவீதம்பேர், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். மனஅழுத்தத்துக்கு விசே‌ஷ காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், போட்டி மனப்பான்மை, காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story