காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி


காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம்  ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2018 8:40 AM GMT (Updated: 8 Oct 2018 10:08 AM GMT)

காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை என டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் தமிழகம் சார்பில் ஒரு மனுவை பிரதமரிடம் வழங்கினார். அதில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.   பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி மனு

தமிழகத்தின் திட்டங்களின் நிலை குறித்து பிரதமரிடம் விளக்கி தமிழகத்துக்கு தேவையான நிதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும்படி வலியுறுத்தினேன். மதுரை எய்மஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்க திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டேன். சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வலியுறுத்தினேன். 

குமரியில் நிரந்தர கடற்படைதளம், சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார்.  

எதிர்க்கட்சி வைக்கும் ஊழல் புகார் பற்றி கேட்கின்றனர் காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான்.

தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது

துணை முதலமைச்சர்- தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார் . ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் இப்போது கூட்டணிக்கு அவசரமில்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.


Next Story