பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2018 10:45 PM GMT (Updated: 8 Oct 2018 7:44 PM GMT)

பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரிக்கப்படும் நிலையில், வினீத் தண்டா என்ற வக்கீல் புதிதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் மற்றும் இந்த விமானங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் தற்போது வாங்கும் விலைக்கு இடையிலான ஒப்பீடு போன்றவற்றை வெளியிட மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், இதன் மீது 10-ந்தேதி (நாளை) விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.


Next Story