மணமகன் ஓட்டம்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்


மணமகன் ஓட்டம்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்
x
தினத்தந்தி 9 Oct 2018 8:03 AM GMT (Updated: 2018-10-09T13:33:32+05:30)

மணமகன் காதலியுடன் ஓடியதால் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா

பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார்.

இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார்.


Next Story