தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம் + "||" + 5 Dead, Several Injured After Train Derails In Uttar Pradesh's Raebareli

உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்

உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்
உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலி, பலர் காயம் அடைந்துள்ளனர்.
ரேபரலி, 

உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரலி அருகே ஹர்சந்த்பூர் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில்  பயணிகள் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாரணாசியில் இருந்து மீட்புக்குழு விரைந்துள்ளது. ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர் அஷ்வினி லோஹனி விரைந்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செய்ய வேண்டும் ,தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. உ.பி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
உத்தர பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை
உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. உ.பியில் காவல்துறையினர் குடியிருப்புகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் புதிய சர்ச்சை
உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் குடியிருப்புகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
4. உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
5. யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்டதாக புகார்: நடவடிக்கை எடுக்க கவர்னர் வலியுறுத்தல்
யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.