தேசிய செய்திகள்

விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார் ; பெரிய விபத்து தவிர்ப்பு + "||" + Indigo flight at Hyd airport hits brakes during take off as vehicle enters runway

விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார் ; பெரிய விபத்து தவிர்ப்பு

விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார் ; பெரிய விபத்து தவிர்ப்பு
ஐதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐதராபாத்

ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை இண்டிகோ விமானம் ஐதராபாத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட தயாராகி உள்ளது. அப்போதுதான் குறுக்கே கார் வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சரியாக அந்த இண்டிகோ 6இ743 விமானம் புறப்பட தயாராகி உள்ளது. ஓடுபாதையில் அந்த விமானம் புறப்பட தயாராகி எஞ்சின் ஆன் செய்யப்பட்டு சிறிது தூரம் சென்றுள்ளது. விமானமும் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

 அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு கார் வந்துள்ளது. விமானம் புறப்படுவதற்கு தடையாக கார் ஒன்று, ஓடு பாதையில் குறுக்கே வந்து இருக்கிறது. இதை பார்த்த விமானிகள் திகைத்து போய் உள்ளனர்.

ஆனால் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் விமானிகள் வேகமாக செயல்பட்டுள்ளனர். மிக துரிதமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி உள்ளனர்.. இதனால் கடைசி நொடியில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அந்த மர்ம காரில் வந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயமோ, வேறு எந்த அசம்பாவிதமோ ஏற்படவில்லை.