பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ்


பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:28 AM GMT (Updated: 10 Oct 2018 9:28 AM GMT)

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


புதுடெல்லி,

மூத்த பத்திரிகையாளராக இருந்த எம்.ஜே. அக்பர் தற்போது மத்திய பா.ஜனதா அரசில் வெளியுறவு இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு மவுனம் சாதிக்க கூடாது, பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஏற்கனவே வலியுறுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமைதியாக இருப்பது ஏன்? என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இவவிவகாரத்தில் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி பேசுகையில், “மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஒரு திருப்திகரமான பதிலை தெரிவிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என கூறியுள்ளார். 

Next Story