தேசிய செய்திகள்

குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது + "||" + Goaded by tantric, brothers hack to death sister-in-law in Bihar

குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது

குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது
பீகாரில் குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீதாமர்ஹி,

பீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் சடார் பகுதியில் வசித்து வருபவர் பகவான் லால் முக்யா.  இவரது மனைவி சரிதா தேவி (வயது 36).  பகவானின் சகோதரர்கள் சுனில் முக்யா மற்றும் வீர முக்யா.

இந்த நிலையில் சுனில் மற்றும் வீர முக்யா தங்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காத நிலையில் வினோத் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.

அந்த மந்திரவாதி, சரிதா தேவியை ஒரு சூனியக்காரி என கூறியதுடன், அவரை கடவுளுக்கு பலி கொடுத்து விட்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் விருப்பம் நிறைவேறும் என கூறியுள்ளான்.

இதனை அடுத்து சரிதா தேவியை சகோதரர்களான சுனில் மற்றும் வீர முக்யா பலி கொடுத்துள்ளனர்.  இதுபற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சகோதரர்கள் மற்றும் வீர முக்யாவின் மனைவி இந்திராசன் தேவி ஆகிய 3 பேரும் இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.

அவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தப்பியோடிய மந்திரவாதி வினோத் மற்றும் அவனது 3 கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா 3 பேர் கைது
கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. தடையை மீறி போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேர் கைது
திருச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு: பிரபல திருடன் கைது
கோபி அருகே பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருடிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.
5. பா.ஜனதா எம்.பி.யை திட்டியதாக 5 பேர் கைது
சண்டையை விலக்க சென்ற பா.ஜனதா எம்.பி.யை திட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.