தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ - தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம் + "||" + Sexual harassment: 'I'm nodding and annoying the name' - National Women's Commission

பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ - தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம்

பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ - தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம்
பாலியல் தொல்லையில் பாதிக்கப்படும் பெண்கள், பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள், சமூக வலைத்தளங்களில் ‘மீ டூ ஹேஷ்டாக்’கில் இணைந்து புகார் கூறுவது தொடர் கதை ஆகி வருகிறது.

ஆனால் பாதிப்புக்கு ஆளாகிற பெண்கள், தங்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறார்களா என்றால் அது இல்லை.


இதுபற்றி தேசிய மகளிர் ஆணையம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “ பல விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களை பாலியல் தொல்லை செய்தவர்களின் பெயரை மட்டும் சொல்லி, அசிங்கப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் முறைப்படி புகார் தர விரும்பவில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையம் கண்டிருக்கிறது” என்று கூறி உள்ளது.

மேலும், “பணி இடங்கள் உள்ளிட்டவற்றில் பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இத்தகைய பாலியல் அத்துமீறல்கள், பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுகிறது. இத்தகைய பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் மையங்களில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
3. பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார்
பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.
4. பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து
பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
5. குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.