தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் போபர்ஸ் வழக்கு அப்பீல் மனு மீது நாளை விசாரணை + "||" + The court hearing on the plea of the Appeal of the Boers case in the Supreme Court

சுப்ரீம் கோர்ட்டில் போபர்ஸ் வழக்கு அப்பீல் மனு மீது நாளை விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில் போபர்ஸ் வழக்கு அப்பீல் மனு மீது நாளை விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில், போபர்ஸ் வழக்கு அப்பீல் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், ரூ.64 கோடி லஞ்சம் கைமாறியது தொடர்பாக, இத்தாலி தொழில் அதிபர் குவாத்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள், வின்சத்தா, எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, கடந்த 2005-ம் ஆண்டு மே 31-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


இதை எதிர்த்து, சி.பி.ஐ. சார்பில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்த மனுக்கள் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் வீடு பராமரிப்பு நிதி இரு மடங்காக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் வீடு பராமரிப்பு நிதி இரு மடங்காக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. சுப்ரீம் கோர்ட்டில், சீல் வைத்த உறையில் தாக்கலான விவரங்கள்; ஊடகத்தில் வெளியானதால் தலைமை நீதிபதி கடும் கோபம் - வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்திவைத்தார்
சுப்ரீம் கோர்ட்டில், சீல் வைத்த உறையில் தாக்கலான விவரங்கள் ஊடகத்தில் வெளியானதால் தலைமை நீதிபதி கடும் கோபமடைந்து, வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்திவைத்தார்.
3. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
சிபிஐ இயக்குநருக்கு எதிரான விசாரணையை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்தது.
4. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு கொறடா ‘கேவியட்’ மனு
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
5. 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.