தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல் + "||" + J&K: Encounter underway in Handwara, 3 terrorists trapped

ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல்

ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில்  பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் ஷார்குண்டா அருகில் உள்ள பாலா என்ற கிராத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
2. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தகவல் வெளியாகியுள்ளது.
3. சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம்
சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து ஜம்மு பஸ் நிலையத்தில் வெடிகுண்டை பயங்கரவாத இயக்கம் வீச செய்துள்ளது.
4. ஜம்முவில் கையெறி குண்டு வீச்சு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
5. ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.