தேசிய செய்திகள்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது + "||" + Man hurls slipper at Nitish's direction, thrashed by JD U supporters

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா,

பாட்னா பாபு சபாகர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசினார். செருப்பு அவர் மீது படவில்லை. கூட்டத்தில் விழுந்தது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள். இளைஞரையும் செருப்பால் தாக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் இளைஞரை அங்கிருந்து இழுத்து சென்றது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்று நடந்துக்கொண்டதாக இளைஞர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 109 ஆக உயர்வு -நிதிஷ்குமார் நலம் விசாரிப்பு
பீகாரில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
2. பீகார் அமைச்சரவை விஸ்தரிப்பு, பா.ஜனதாவிற்கு இடம் வழங்கப்படவில்லை
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.