உடல் பருமனை பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; மம்தா பானர்ஜி


உடல் பருமனை பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 Oct 2018 11:26 AM GMT (Updated: 11 Oct 2018 11:26 AM GMT)

உடல் பருமனை பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

உடல் பருமன் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல் எடை பற்றிய உண்மை, தீவிர தன்மை கடுமை மற்றும் வகைகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இதில் ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலக உடற்பருமன் கூட்டமைப்பு இந்த வருடம், உடல் பருமன் பற்றிய அவதூறுகளை மக்கள் நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.  உடல் பருமன் கொண்டவர்களுக்கு எதிரான பேச்சு மற்றும் படங்கள் ஆகியவற்றை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  அதற்கு பதிலாக, உடல் பருமனை பற்றி நல்ல முறையில், சரியான மற்றும் தகவல் அளிக்கும் வகையில் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.


Next Story