தேசிய செய்திகள்

காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது + "||" + Google engineer held for theft, says did it to meet girlfriend's expenses

காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது

காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது
டெல்லியில் காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து கான்பிரன்ஸ் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவனம் சார்பாக இளைஞர் ஒருவரும் கலந்து கொண்டார். அதே கூட்டத்திற்கு  தேவயானி என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் கூட்டம் முடிந்த பின் பணத்தை காணாமல் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவயானி தன் பணம் காணவில்லை என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார். 

இந்நிலையில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களின் பட்டியலை வைத்து விசாரித்தனர். மேலும் நிகழ்ச்சி நடைப்பெற்ற போது சேகரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சோதனை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது ஒரு நபர் தேவயானி பணத்தை திருடுவதும், அவர் வேக வேகமாக டாக்சியில் ஏறி போவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருடியவர் ஏறிச்சென்ற டாக்சி எண்ணை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து பேசிய டெல்லி துணை ஆணையர் மதூர் வர்மா,  பணத்தை திருடிய ஷாகானி (வயது 24) தன் காதலிக்கு செலவு செய்வதற்காக பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். 10 ஆயிரம் திருடப்பட்ட நிலையில், கைது செய்யும் போது அவரிடம் ரூ. 3000 மட்டுமே இருந்துள்ளது என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கூகுள் பொறியாளர் அரியானா மாநிலம் அம்பலா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.