ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்கிறது


ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்கிறது
x
தினத்தந்தி 11 Oct 2018 12:26 PM GMT (Updated: 11 Oct 2018 12:26 PM GMT)

ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்குவதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஞ்சி,

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது. 

புயல் காரணமாக, ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.  காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.  இரு மாவட்டங்களிலும் மின் இணைப்பு மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. கடற்கரையோரத்தில் உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புயல் மற்றும் கனமழை காரணமாக ஸ்ரீகாகுளம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்கள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்,  ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கைவரிசையை காட்டிய  தித்லி  புயல் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தை நெருங்குவதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களை இந்த புயலானது தாக்கும் என கூறப்பட்டுள்ளது.  முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

Next Story