ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுப்பு


ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 2:03 PM GMT (Updated: 11 Oct 2018 2:03 PM GMT)

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.


ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதுதொடர்பாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ‘ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய கூட்டாளி நிறுவனமாக ரிலையன்சை தேர்வு செய்வதை தவிர வேறு வாய்ப்புகளை இந்தியா எங்களுக்கு அளிக்கவில்லை’ என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டேவும் கடந்த மாதம் கூறியிருந்தார். இதற்கு இருநாட்டு அரசு தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  

இந்திய நிறுவனங்களை தேர்வு செய்வதில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு புலனாய்வு மீடியா ‘மீடியாபார்ட்’ வெளியிட்ட தகவலில், ரபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமென்றால் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்வது கட்டாயமும், அவசியமும் ஆகும் என்று டசால்ட் நிறுவனத்தின் உள் ஆவணம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து இவ்விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் டசால்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்களே சுதந்திரமாக தேர்வு செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Next Story