பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்!


பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்!
x
தினத்தந்தி 12 Oct 2018 10:02 AM GMT (Updated: 12 Oct 2018 10:02 AM GMT)

பராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிஎன்எஸ்-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐசிஏஎன்என் மேற்கொள்ள உள்ளது. 

‘சைபர் அட்டாக்’ அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐசிஏஎன்என் கூறியுள்ளது.   
  
 தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பான, ஸ்திரமான டிஎன்எஸ் உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சிஆர்ஏ தெரிவித்துள்ளது.
 
 இணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டியது வரும்.

Next Story