தேசிய செய்திகள்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு + "||" + Women who enter Sabrimala must be ripped in half: Kerala actor Kollam Thulasi

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என்று மலையாள நடிகர் கொல்லம் துளசி தெரிவித்துள்ளார்.
கொல்லம்,

மலையாள நடிகரரும்  பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக பிளக்க வேண்டும்.  ஒன்றை  திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என்றார்.

சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதற்கு பெயர் போனவர் கொல்லம் துளசி. முன்னதாக கடந்த வாரம் அவரிடம் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் திலீப் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, மீடியா இதை ஊதிப் பெரிதாக்கி விட்டது. நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரம்: முதல்வர் வீடு நோக்கி பேரணியாக சென்ற பா.ஜனதாவினரை போலீஸ் விரட்டியது
சபரிமலை விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் வீடு நோக்கி பேரணியாக சென்ற பா.ஜனதாவினரை போலீஸ் விரட்டியது.
2. சபரிமலை விவகாரம்: கேரள காங்கிரசார் மீது பினராயி விஜயன் கடும் தாக்கு - 4வது நாளாக சட்டசபை முடக்கம்
சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டசபை 4-வது நாளாக முடங்கிய நிலையில், காங்கிரசார் மீது முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
3. சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் 3-வது நாளாக கடும் அமளி
சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவை 3-வது நாளாக முடங்கியது.
4. சபரிமலை விவகாரம்: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
5. சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் சந்திரா மாற்றம்
சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் சந்திரா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.