தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார்: பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கு - ம.பி. ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் + "||" + Sexual complaint against the Court of Justice: The case of the woman who resigned

ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார்: பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கு - ம.பி. ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார்: பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கு - ம.பி. ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார் கூறி பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கில், மத்திய பிரதேச ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலத்தில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய ஒரு பெண், ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் மீது பாலியல் புகார் கூறினார்.

2014-ம் ஆண்டு எழுந்த இந்தப் புகாரில் அந்தப் பெண் நீதிபதிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்கள் 58 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பேரில், அந்த ஐகோர்ட்டு நீதிபதிக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட்’ (பதவி நீக்க தீர்மானம்), கொண்டு வரப்பட்டது.


அதில் ஒரு அங்கமாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர். பானுமதி, அப்போதைய மும்பை ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா செல்லூர், மூத்த வக்கீல் (தற்போதைய அட்டார்னி ஜெனரல்) கே.கே. வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஐகோர்ட்டு நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில், அவர் குற்றமற்றவர் என தெரிய வந்து 2017-ம் ஆண்டு அறிக்கை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து புகார் கூறிய பெண் நீதிபதி, பதவி விலகி விட்டார்.

இப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் தனது பதவி மூப்பை மறுசீரமைப்பு செய்து, அதற்கான சம்பளத்தை வழங்க கோரி உள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் 6 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய பிரதேச ஐகோர்ட்டு பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் - கனிமொழி எம்.பி. பேச்சு
பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
2. தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி தகவல்
தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
3. லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு
லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு போடப்பட்டுள்ளது.
4. பரமத்தி வேலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி
பரமத்தி வேலூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுவன் பலியானான்.
5. மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது
பேரணாம்பட்டில் மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது டிப்பர் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.