தேசிய செய்திகள்

தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு + "||" + Corruption case against Tamil Nadu Chief Minister: DMK in Supreme Court caveat petition

தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு

தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு
தமிழக முதல் அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இதை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.


இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த புகார்களை முற்றிலுமாக மறுத்துள்ள அ.தி.மு.க. தலைமை சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அந்த விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டும், தங்கள் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த கேவியட் மனுவில் கூறப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. விஜய்க்கு எதிரான வார்த்தைகள் - வருத்தம் தெரிவித்த கருணாகரன்
விஜய்க்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நடிகர் கருணாகரன் வருத்தம் தெரிவித்தார்.
2. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
3. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.
4. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது நல்லது தான் - முன்னாள் கேப்டன் டிராவிட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சந்தித்த தோல்வி நல்லது தான் என்று இந்திய முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியுள்ளார்.