தேசிய செய்திகள்

வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி + "||" + Maharashtra Minister Backtracks: No plan for liquor at doorstep

வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி

வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி
வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று மராட்டிய மந்திரி அறிவித்துள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. இதற்கு ஆன்-லைனில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே நேற்று கூறுகையில், “பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். வருவாயை அதிகரிக்கவே அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மராட்டிய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில், மராட்டிய மாநில கலால் துறை மந்திரி பவன்குலே திடீரென தனது முந்தைய அறிவிப்பில் இருந்து பல்டி அடித்துள்ளார். வீடுகளுக்கு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் 5-வது நாளாக நீடிக்கிறது ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்
மராட்டியத்தில் 5-வது நாளாக ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது.
2. பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு
பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
3. மராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடல், 3 திருமணங்களும் ரத்து
மராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடப்பட்டது.
4. மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை !
மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை சிறுத்தை அடித்துக்கொன்றது
5. மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
மராட்டியத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.