தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி + "||" + Air India air hostess falls off plane at Mumbai airport

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி
மும்பை விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
மும்பை,

மும்பையிலிருந்து காலை ஏர்இந்தியாவின் AI 864 போயிங் விமானம்  புதுடெல்லிக்கு செல்லவிருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்தபோது பணிப்பெண் ஒருவர் விமானத்தின் கதவை  மூடச்சென்றுள்ளார். அப்போது தவறுதலாக கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த பெண் ஹர்சா லோபா என தெரியவந்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் என தெரிவித்துள்ள ஏர்இந்தியா நிறுவனம் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஹர்சாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கால்களில் பல்வேறு இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, இரண்டு குதிகால் பகுதியிலும் எழும்பு முறிவு உள்ளது மற்றும் மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையளித்து வருகிறோம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல் 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
2. ரஷியாவில் பயங்கரம்: அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து 41 பேர் பலி
ரஷியாவில், அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததில் 41 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
3. விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்ததால், ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு
பாகிஸ்தான் தன்னுடைய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.
4. ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிப்பு
ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.
5. சாப்ட்வேர் கோளாறு; 155 ஏர் இந்தியா விமானங்கள் இரவு 8.30 மணிவரை காலதாமதமுடன் இயங்கும்
சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்.