தேசிய செய்திகள்

தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள், தேர்தல் ஆணையம் ஆய்வு + "||" + 190 suspected Rohingyas in Telangana voters list

தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள், தேர்தல் ஆணையம் ஆய்வு

தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள், தேர்தல் ஆணையம் ஆய்வு
தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
ஐதராபாத்,

இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அவர்கள் ஆதார் அடையாள அட்டை உள்பட இந்திய அரசு வழங்கும் ஆவணங்களை பெறுகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் மாநகராட்சி அதிகாரி பேசுகையில், “தெலுங்கானாவில் உள்ள 190 ரோஹிங்யாக்களின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளோம், அதனை ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான ஆவணங்களை நாங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்,” என கூறியுள்ளார். 

இதுபோன்று ரோஹிங்யாக்களின் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தால் அதனை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நாங்கள் 25 பெயரை நீக்கியுள்ளோம். ஆய்வு செய்யும் பணியும், நீக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டாவது வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் செய்துவிடுவோம் என கூறியுள்ளார். இதுபோன்று ரோஹிங்யாக்களின் பெயர்கள் ஐதராபாத் சிட்டியை ஒட்டிய தொகுதிகளிலும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆவணங்கள் குறிப்பிட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...