கிரிக்கெட் வீரர் முகம்மது சமியின் மனைவி காங்கிரசில் இணைந்தார்


கிரிக்கெட் வீரர் முகம்மது சமியின் மனைவி காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:18 AM GMT (Updated: 17 Oct 2018 3:18 AM GMT)

முகம்மது சமியுடன் கருத்து வேறுபாடு காரணாமக பிரிந்து வாழும் அவரது மனைவி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகம்மது சமி. இவருக்கும் இவரது மனைவி ஹசின் ஜகனுக்கு இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.  குறிப்பாக முகம்மது சமி  மீது ஸ்பாட் பிக்சிங் புகார், பல பெண்களுடன் தொடர்பு என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி ஹசின் ஜகன் பரபரப்பை ஏற்படுத்தினார். 

முகம்மது சமி மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக முதலில், அவரது ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிசிசிஐ, பின்னர் விலக்கி கொண்டது.  குடும்ப  பிரச்சினை தொடர்பாக ஹசின் ஜகன் போலீசில் புகார் அளித்ததால், முகம்மது சமி மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீதான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. 

இந்த நிலையில், ஹசின் ஜகன் , அரசியலில் கால் பதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக  மும்பை காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது  ஹசின் ஜகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

Next Story