தேசிய செய்திகள்

பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம் + "||" + Security forces gun down three terrorists in J&K encounter

பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்

பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு காவலர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள படே கதல் பகுதியில்  இன்று அதிகாலை தேடுதல் வேட்டையின் போது குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  காவலர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த 3 தீவிரவாதிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்புப் படையினரிடமிருந்து அவர்கள் திருடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜம்முகாஷ்மீர் டிஜிபி தெரிவித்துள்ளார். இதனிடையே, பாரமுல்லாவின் பட்டன் பகுதியில், போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
2. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை, பாஜக 2 இடங்களில் முன்னிலை
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
3. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
5. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.