காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு


காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:32 AM GMT (Updated: 17 Oct 2018 10:32 AM GMT)

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவின் காத்கியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிவந்த 30 வயது பெண்ணை மருத்துவமனையில் வைத்து ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள பெண், மருத்துவமனையில் இரவு பணிகளின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக என்னிடம் தவறாகவே நடந்துக்கொண்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் தெரிந்த மேலும் 2 ராணுவ வீரர்கள் அந்த பெண்ணிடம் தவறாகவே நடந்துக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக 4 ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் இல்லாத பெண்ணிற்கு 12 வயதில் மகன் உள்ளான். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Next Story