தேசிய செய்திகள்

சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்? + "||" + Women who tried to enter Sabarimala: Who is the full description of these women?

சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்?

சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்:  யார் இந்த பெண்கள் முழு விவரம்?
சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம் வெளியாகி உள்ளது.
சபரிமலை

 இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் பயணம் செய்தனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டன.

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கவிதா அவர் ஆந்திரம் மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஆனால், ஒரு பக்கம் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  போலீசார்  2 பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  பம்பைக்கு அழைத்துவரப்பட்டனர். 

இதை தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் போராட்டதை  கைவிட்டனர்.

இந்த நிலையில் பாத்திமா ரெஹனாவின் வீடு கொச்சியில் உள்ளது. அவரது வீட்டில் இன்று சில மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ரெஹ்னா பாத்திமா கேரளாவில் மத்திய அரசாங்க ஊழியராக பணியாற்றி வருகிறார். 2 குழந்தைகளுக்கு தாயுமாவார். கேரளாவின் மிக முக்கிய பெண்ணியவாதியாக குறிப்பிடப்படுகிறார். பெண் உடல்களை  பாலியல் ரீதியாக அணுகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடையின்றி  ஆர்ப்பாட்டம் நடத்தி புகழ்பெற்றவர். சமூகத்தின் ஆழ்ந்த வேரூன்றிய ஒரே மாதிரியான சிலவற்றை அகற்றுவதற்கான மற்றொரு முயற்சியாக  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரக்கூடியவர். 

முதல் முதலாக  ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும்  திருச்சூர்  புலிக்கலி என கூறப்படும் பாரம்பரிய புலி நடனத்தின் 2016 ஆம் ஆண்டு  முதல் பெண்ணாக கலந்து கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  முத்த போராட்டத்திலும் கலந்து கொண்டு முன்னிலை வகித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உள்பட 2 பேர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் கைவிட்டனர்.
2. சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா நிவாரண மையத்தில் தங்கவைப்பு
சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா, நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
3. சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தார், கேரளா போலீஸ் உறுதி செய்தது
சபரிமலையில் இலங்கை பெண் ஒருவர் தரிசனம் செய்தார் என்பதை கேரளா போலீஸ் உறுதி செய்தது.
4. பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
சபரிமலை கோவிலுக்குள் கேரள பெண்கள் 2 பேர் சென்றதால் ஐயப்பன் கோவில் நடை திடீர் என அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
5. சபரிமலை கோவிலுக்குள் கேரள பெண்கள் சென்றதால் ஐயப்பன் கோவில் நடை திடீர் அடைப்பு
சபரிமலை கோவிலுக்குள் கேரள பெண்கள் 2 பேர் சென்றதால் ஐயப்பன் கோவில் நடை திடீர் என அடைக்கப்பட்டது.